Advertisment

தேசிய கட்சியாக மாறும் விசிக?

vck about becoming a national party

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில்,ஆட்சியைத்தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும்பிடிக்கக்காங்கிரஸ் கட்சியும்படுதீவிரமாகசெயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு திமுக, காங்கிரஸ், விசிக,சமாஜ்வாதி,திரிணாமுல்காங்கிரஸ் உள்ளிட்ட பலஎதிர்க்கட்சிகள்ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மற்றொரு புறம் பாஜக என்.டி.ஏகூட்டணிஎன்ற பெயரில் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தமிழகத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த 4 தொகுதிகளிலும்தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை விசிக தலைவர்திருமாவளவன்டெல்லி சென்றுள்ளார்.நாடாளுமன்றத்தேர்தலில் பானை சின்னம்ஒதுக்கக்கோரி தலைமைதேர்தல்ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

Advertisment

அதன் பிறகு டெல்லியில்செய்தியாளர்களைச்சந்தித்ததிருமாவளவன், “நாடாளுமன்றத்தேர்தலில் விசிக போட்டியிடவுள்ளோம். அதனால்எங்களுக்குப்பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதற்காக நாங்கள் தேர்தல் ஆணையத்தைஅணுகவந்தோம்; ஆனால் முன் அனுமதி பெறவில்லை என்பதால் எங்களால் தேர்தல் ஆணையஅதிகாரிகளைப்பார்க்க முடியவில்லை. அதற்கானதனிப்பிரிவில்எங்களைக்கோரிக்கையை மனுவாகசமர்ப்பித்துள்ளோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5தென்மாநிலங்களில்விசிக சார்பில்நாடாளுமன்றத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம். அதனால்விசிகாவிற்குசுயேட்சைசின்னத்திலிருந்துபானைசின்னதைபொது சின்னமாகமுன்கூட்டியே அதனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கானமனுவை தேர்தல்ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு; அது சுதந்திரமாகசெயல்படவேண்டும். விருப்பு வெறுப்புஇன்றி, ஆளும் கட்சிஎதிர்க்கட்சிஎன்ற பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும்” என்றார்.

விசிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது பானை சின்னத்தில் போட்டியிடுவார்களா என்றுகேள்விக்கு, “கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள்6 தொகுதிகளிலுமே பானைசின்னத்தில்நின்றோம். அப்போது திமுக எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்நிற்கச்சொல்லி எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆனால் கடந்தநாடாளுமன்றத்தேர்தலில் அந்த மாதிரி சொன்னார்கள்; அப்போதுவெற்றியைக்கருத்தில் கொண்டு மட்டுமே அந்தமாதிரி கூறினார்கள்” என்று பதிலளித்தார்.

vck Thirumavalavan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe