ni

தமிழகத்தில் தொலைக்காட்சி, பத்திரிகைகளை விட அதிகமாக மக்களால் பகிரப்படுவது சமூக வலைதளங்கள். இதன் மூலமாகத் தான் மக்களுக்கு விரைவாக தகவல் கொண்டு செல்கிறது. ஆனால் இந்த சமூக ஊடகங்களை பயன்படுத்தி குற்ற செயல்களிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இதை கட்டுப்படுத்துவதற்கு என்று புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

திருச்சி மாநகர காவல்துறையில் குற்றங்களை தடுக்கும் விதமாக சமூக வலைதள ஊடக பிரிவு துவங்கப்பட்டது. தமிழக காவல்துறையில் காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் புதிதாக சமூக வலைதள ஊடக பிரிவு துவங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக வலைதள ஊடக பிரிவு துவங்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையர் நிஷா துவக்கி வைத்தார்.

Advertisment

இதில் சார்பு ஆய்வாளர் மற்றும் 3 காவல் ஏட்டுகள் இடம்பெற்றுள்ளனர். இந்த சமூக வலைதள ஊடக பிரிவை சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ப்ளாக்கர் ஆகியவைகளை பயன்படுத்தி நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் மாநகரம் மற்றும் மண்டலங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை மண்டலம் மற்றும் மாநகர காவல் அளவில் ஒரு குழுவினை அமைத்து, அவர்களுக்கு சென்னையில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.