v n

தமிழர்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தும் வாட்டாள் நாகராஜ் கர்நாடக தேர்தலில் டெபாசிட் இழந்தார்.

Advertisment

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தலைவரும், கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ், தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடும்போதெல்லாம் தீர்ப்புக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்து நடத்துபவர் வாட்டாள் நாகராஜ்.

Advertisment

தமிழர்களுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வரும் வாட்டாள் நாகராஜ், நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் டெபாசிட் இழந்து படு தோல்வி அடைந்தார். சாம்ராஜ்நகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நாகராஜ், அதே தொகுதியில் தற்போது போட்டியிட்டார். தேர்தல் முடிவில், வெறும் 5,977 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து, 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி 75 ஆயிரத்து 963 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.