நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹெச்.வசந்தகுமாரின் ராஜினாமாவை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஏற்றுக்கொண்டார். இன்றுமுதல் ஹெச்.வசந்தகுமாரின் ராஜினாமா ஏற்கப்படுகிறது என பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Advertisment
நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரில் போட்டியிட்டு வென்றதையடுத்து ஹெச். வசந்தகுமார் ஏற்கனவே வகித்து வந்த எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடக்கத்தக்கது.