கீழக்கரை எஸ்.ஐ வசந்தகுமார்
பொதுமக்கள் மீது ருத்ரதாண்டவம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ வசந்தகுமார் போதையிலிருந்த மாடுபிடி வீரர்களை வெளியேற சொன்னபோது அவர்களுக்கும், எஸ்.ஐ வசந்தகுமாருக்கும் வாய்தகராறு ஏற்ப்பட்டது. உடனடியாக லத்தியை சுழற்றி எஸ்.ஐ வசந்தகுமார் மற்றும் காவலர்கள் போதையிலிருந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கு வந்த ஊர் நிர்வாகிகள் சமதானம் செய்தனர். ஆனால் அப்போதும் எஸ்.ஐ சமதானமடையவில்லை.
-பாலாஜி