"பிரியங்கா மரணத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பு" - கொதித்தெழுந்த நடிகை வரலட்சுமி!

தெலங்கான மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா(26), கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக எரித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

priyanka

இந்த வழக்கில் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு, பிரியங்கா கொலையில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார், "இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய வேண்டுமோ?..பிரியங்கா மரணத்திற்கு நாம் அனைவருமே பொறுப்பு. மிருகங்களை விட கொடிய மனித மிருகங்கள் வாழும் இவ்வுலகில் நாம் வாழ்கிறோம். பெற்றோர்கள் தங்களது ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களைப் போற்ற அவசியமாக கற்றுத்தர வேண்டும். பயன்படுத்திவிட்டு தூக்கி எரிய நாம் ஒன்றும் பொருள் அல்ல" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

varalaxmi

மேலும் பிரியங்கா கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக "#மரண தண்டனை" என்ற ஹேஷ் டேக்கையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Tweets varalakshmi sarathkumar
இதையும் படியுங்கள்
Subscribe