நடிகை வரலட்சுமி சரத்குமாரும், நடிகர் அர்ஜுனின் உறவினர் சிரஞ்சீவி சார்ஜாவும் நடித்து வரும் கன்னட படம் ’ரணம். பெங்களூரை அடுத்த பாகலூரு பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பில் கார் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டபோது அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/varalakshmi sarathkumar1.jpg)
இந்த திடீர் விபத்தில் படப்பிடிப்பை காண வந்த தாயும், அவரது குழந்தையும் உயிரிழந்தனர். மேலும், காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ranam.jpg)
Follow Us