Skip to main content

       கலெக்டர் & வி.ஏ.ஓ. ஆடியோ யுத்தம்

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

 

வி.ஏ.ஓ.க்களின் பணி தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவின் ஆடியோ பேச்சுக்கு பதில் தரும் வகையில் பெண் வி.ஏ.ஓ. பேசிய ஆடியோவும் வைரலாகி வருகிறது.

 

co

 

நெல்லை கலெக்டர் ஷில்பாவிடம் மனுக் கொடுத்த 80 வயதான மூதாட்டி ஒருவர், கிஷான் சமான் யோஜன திட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிவாரணத்தைப் பெற விண்ணப்பம் கொடுத்தவர்கள் இரண்டு நாளா அலையுறோம் என்றிருக்கிறார். இது தொடர்பாக கலெக்டர் ஷில்பா பொதுவாக வி.ஏ.ஓ.க்களின் கடமையை, செய்ய வேண்டிய முறையை வலியுறுத்தி ஆடியோவில் பேசியதாவது:

 

’’குட்மார்னிங். ஃபார்மர்ஸ் ரிஃபார்ம் தொடர்பான மனுவை 80 வயதான பெண் என்னிடம் மனுக் கொடுக்க வந்திருக்கிறார். ரெண்டு நாளும் வி.ஏ.ஓ. அங்க யில்ல இப்படி இருந்தா நியு அப்ளிகேசன் எப்படி கலெக்ட் பண்ண முடியும். வி.ஏ.ஓ. ஆபீஸ், ஆர்.ஐ. தாலுகா ஆபீஸ்னு அலைஞ்சிட்டு இங்க வந்திருக்காங்க. இப்டியிருந்தா உங்க வேலைல எப்படி திருப்தியாக முடியும். அந்த வி.ஏ.ஓ. ஸ்பாட்டுக்குப் போகாமலே ரிப்போர்ட் கொடுத்திருக்கார். இது சீரியசான மேட்டர். ஐ யாம் நாட் சேட்டிஸ்பையிங் வித்யுவர் ஓர்க். அந்த வி.ஏ.ஓ. பாரத்த சரியா ஃபில் அப் பண்ணிருக்கார். ஆனா பாரத்த வாங்கல. இட்ஸ் நாட் வேதி அப்ளிகேசன். வி.ஏ.ஓ. ஃபவுண்ட் இன் ஆபீஸ் ஃப்ரம் மார்னிங் டூ ஈவினிங். நா, எந்த வில்லேஜூக்கும் போறப்ப, வி.ஏ.ஓ. நாட் பவுண்ட் இன் ஆபீஸ், ஐ.வில் சஸ்பெண்ட். யாராவது சஸ்பெண்ட் செய்யப்பட்டால் ஐ யாம் நாட் ஃபாதர் அபெளட் இட். ஐ. அப்பீல் யூ, ஒவ்வொரு வி.ஏ.ஓ.ட்டயும், எலிஜிபிள், நான்-எலிஜிபிள் ரிப்போர்ட்ட வைச்சிருக்கணும். நான் சரி பார்ப்பேன். அந்தந்த தாசில்தார் கண்காணிக்கணும் ஒ.கே. வருவாய்த்துறையினருக்கான வாட்ஸ் அப்பில், கலெக்டரின் இந்த ஆடியோ பேச்சு பரவரலாகி, மற்ற வாட்ஸ் அப்களில் பரவியதையடுத்து அதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டைத் தெரிவித்திருக்கின்றனர்.

 

அதே சமயம், மறு நாள் பதிலடியாக ஒரு பெண் வி.ஏ.ஓ.வின் பதிவிட்ட ஆடியோவும் வருவாய்த்துறை வட்டாரத்தைக் கலக்கி வருகிறது.

 

co

 

வணக்கம். நா, பெண் வி.ஏ.ஓ. பேசறேன். கலெக்டர், எங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நா காலை முதல் இரவு 7 மணி வரை ஆபீஸ்ல வேலை பாக்கேன். பெண் வி.ஏ.ஓ.வான எனக்கு ஆபீஸ்ல இயற்கை உபாதையைத் தணிக்க வசதியில்ல. அதையும் பொறுத்துக் கிட்டுத்தான் வேலை செய்யறோம் வீடு திரும்ப இரவு 7 மணி யாவுது. அதுக்கப்புறம் தான், என்னோட சின்ன புள்ளைகளுக்கு சாப்பாடு சமைச்சி குடுக்கேம். கலெக்டர் சொல்ற அந்த மனுதாரருக்கும், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ.க்கும் கருத்து வேறு பாடு இருந்திருக்கலாம் அத சரி பாக்காம கலெக்டர் எச்சரிக்கையாப் பேசியிருக்காக. காலை 10 மணிக்கு நோட் குடுத்திட்டு ஒரு மணிக்குள்ள அறிக்கை வேணும்னு கேட்டா, அதுல எப்டி உண்மைத் தன்மை இருக்கும். போக்குவரத்து வசதி, உதவிக்கு ஆள் இல்லாம கொறைஞ்ச சம்பளத்தில் வேல பாக்கோம் ஆனா, தாசில்தார், கலெக்டர்களுக்கு உதவிக்கு ஆள் இருக்காக. எங்க ஆர்.ஐ., இரவு 10 மணிக்கு மேல ஆபீஸ் வேலய முடிக்க கூப்புடுறார். அங்க எனக்கு பாதுகாப்பு இல்ல நா, வரமுடியாது. என்ன வேணா சஸ்பெண்ட் பண்ணிக்குங்க, நா, கோர்ட்ல பாத்துக்கிறோம்னு சொல்லிட்டேம். ஒரு தடவ திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில ராத்திரி 10 மணிக்கு நா, டேட்டா என்ட்ரி போட்டுட்டிருந்தப்ப அங்க வந்த தலையாரி ஒருத்தர் குடிச்சிருந்தார். என்ட்ட தகாத முறையா பேசுனார். அத, நா சங்கத்தில கம்ப்ளைண்ட் பண்ணுனேம். அவங்ககண்டுக்கல. அப்புறமா, சமாளிச்சாக. இப்படித்தான் நாங்க அடிமைகளாயிருக்கோம். கலெக்டர் பேச்சுக்கு எதிரா சங்கம் தீர்மானம் போடணும். நன்றி வணக்கம் என்றார் பேசியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்