Skip to main content

மணல் கடத்தல்; சினிமா பாணியில் லாரியை விரட்டிபிடித்த வி.ஏ.ஓ

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
VAO chased away the lorry carrying sand in cinematic style

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கட்டளை காவிரி பகுதியில் இரவு, பகல் பாராமல் மணல் திருடப்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று(28.5.2024) மாலை மணல் அள்ளிக்கொண்டு லாரி ஒன்று பைபாஸ் சாலையை நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.

இதைக் கவனித்த பொதுமக்கள் கிராம நிர்வாக அரலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அப்பகுதி விஏஒ ஸ்டாலின் பிரபு தன்னுடைய பைக்கில் வேகமாக விரட்டியுள்ளார். சுமார் 1கிலோ மீட்டர் தூரம் விரட்டி சேஸ் செய்து லாரியை மடக்கியுள்ளார். விஏஒ லாரியை நெருங்கியதும் லாரியை சாலையிலேயே நிறுத்திய டிரைவர் சாவியை எடுத்துக் கொண்டு தப்பி ஒடிவிட்டார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தார். பின்னர் மாற்று ஏற்பாடு செய்து லாரியைக் கொண்டு வந்து மாயனூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ரெங்கநாதபுரம் விஏஒ ஸ்டாலின் பிரபு கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் லாரியை அரசு ஊழியர் இரு சக்கர வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்