Advertisment

பட்டா பெயர் மாற்ற லஞ்சம்; கையும் களவுமாக சிக்கிய விஏஓ

nn

Advertisment

பட்டா பெயர் மாற்றத்திற்கு நான்காயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விஏஓ மற்றும் அவரின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ராணிப்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.

அரும்பாக்கத்தைச்சேர்ந்த தசரதன் என்ற நபர் தனது பூர்வீக கிராமமான செல்வமந்தை பகுதியில் வாங்கிய வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காகச் சென்ற இடத்தில், விஏஓ லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுத்தார். இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் திட்டப்படி ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை தசரதன், விஏஓ சதீஷ் மற்றும் அவரது உதவியாளர் ராஜலிங்கத்திடம் கொடுத்துள்ளார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

Bribe ranipet VAO
இதையும் படியுங்கள்
Subscribe