Advertisment

வி.ஏ.ஓ. கொலை வழக்கு; ஆகஸ்ட் 21இல் விசாரணை

vao case Hearing on August 21

கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய லூர்து பிரான்சிஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிஸை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலைத்தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

Advertisment

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த வழக்கில் 52 சாட்சிகள் அடையாளம் காணப்பட்டு, அரிவாள் உள்ளிட்ட 13 பொருட்கள் குறியீடு செய்யப்பட உள்ளன.

police VAO Tuticorin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe