Advertisment

அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ வெட்டி படுகொலை; தூத்துக்குடியில் அதிர்ச்சி

VAO broke into the office and hacked; Shock in Tuticorin

Advertisment

அலுவலகத்திற்குள் புகுந்து விஏஓ வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடிவல்லநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியில் இருந்த போதே மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் காவலர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில் மணல் கடத்தல் அல்லது மணல் அள்ள அனுமதி அளிப்பது தொடர்பாகஇச்சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாகலூர்து பிரான்சிஸை வெட்டியவர்கள் என ராமசுப்ரமணியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மாரிமுத்து என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் தனிப்படைகளை அமைத்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலிஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வெட்டுக்காயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் பின் இந்த வழக்குகொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு தப்பிச் சென்ற குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

police tutucorin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe