VAO arrested for transferring ownership using fake documents

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் மரியகிளாரா என்பவர் தனது தந்தையின் பெயரில் இருந்த சொத்தை அவரது உறவினர்களான ஆரோக்கியம்மாள், ஆரோக்கியசாமி, ஜோசப் ராஜ் ஆகிய மூன்று பேரும் போலியாக வாரிசு சான்று பெற்றுக் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டா மாற்றம் செய்துள்ளனர் என்று உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

இந்த வழக்கின் விசாரணையில் இது தொடர்பான ஆவணங்களை மரியகிளாரா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பட்டா மாற்றியது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க எலவனாசூர்கோட்டை காவலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் எலவனாசூர்கோட்டை போலீசார் இந்த புகார் தொடர்பாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆரோக்கியம்மாள், ஆரோக்கியசாமி, ஜோசப் ராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

Advertisment

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆவணங்களை போலியாக தயார் செய்து பட்டா மாற்றம் செய்த அப்போதைய ஏறையூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த அமர்நாத்தை போலீசார் நேற்று(28.1.2025) கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். . இதனிடையே அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டீ. ஒரத்தூர் , பா.கிள்ளனுர் கிராமத்தில் வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.