Advertisment

இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

VAO arrested for getting Rs 2,000 bribe

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கண்ணகுடி கிராமத்தைச்சேர்ந்தவர் பெரியசாமி என்பவரின் மனைவி தனபாக்கியம். இவருக்கு 1999ஆம் ஆண்டு அரசு 3 சென்ட் நிலத்தைஇலவசமாக வழங்கியுள்ளது. இந்த நிலத்திற்குப் பட்டா பெற தனபாக்கியம் விண்ணப்பித்துள்ளார்.

Advertisment

இதனை ஆய்வுசெய்து பட்டா வழங்குவதற்குகண்ணகுடி கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி 2,000 ரூபாய் கையூட்டாக கேட்டுள்ளார். இந்நிலையில், தனபாக்கியத்தால் இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க முடியாத சூழ்நிலை இருந்ததையடுத்து, அவர் லஞ்ச ஒழிப்புத்துறையை நாடியுள்ளார். அவர்களின் வழிகாட்டுதலின் படி நேற்று (17-12-2021) மதியம் விஏஓ மலர்கொடி 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையுமாக களவுமாகப் பிடித்தனர்.

Advertisment

VAO trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe