22

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள வளத்தியை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் ஈசூர் மின்வாரிய அலுவலகத்தில் வணிக பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். அந்த விவசாயிடம் இளங்கோவன் 3,000 லஞ்சம் கேட்டுள்ளார். இந்த லஞ்சப் பணத்தை இளங்கோவன் விவசாயிடமிருந்து பெற்றபோது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இளங்கோவனை பிடித்து கைது செய்தனர்.

Advertisment

இவர் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் இளங்கோவனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்துள்ளார்.

Advertisment

அதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள திருக்க னங்கூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் மணிவண்ணன். இவர் அப்பகுதியில் விவசாயி ஒருவர் வங்கியில் கடன் பெறுவதற்க்காக சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரிடம் 2,000 லஞ்சம் கேட்டுள்ளார் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன். அந்த விவசாயி மணிவண்ணனிடம் லஞ்சப் பணம் கொடுக்கும்போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரல் கைது செய்யப்பட்டு மணிவண்ணன் சிறையிலடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையும் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் அனைத்து சாட்சிகளிடம் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கிலும் நீதிபதி மோகன் தீர்ப்பு வழங்கினார். அதில் மணிவண்ணனுக்கு நான்கு ஆண்டு சிறைதண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி சாதாரண மக்களோடு நெருக்கமாக இருக்கும் கீழ்நிலை அதிகாரிகள் மனசாட்சி இல்லாமல் லஞ்சம் கேட்டு அதில் பலர் லஞ்ச வழக்கில் சிக்கிக் கொண்டு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று சிறைக்கு செல்கிறார்கள் இது அவ்வப்போது நடந்து வருகிறது இருந்தும் கிராம அளவில் உள்ள அதிகாரிகள் முதல் பெரிய அதிகாரி அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது மட்டும் குறையவே இல்லை ஒரு தாலுக்கா அலுவலகத்தில் மனு கொடுத்து அந்த மனுவில் மீதுசீல்போடும் கடைநிலை ஊழியர் மக்களிடம் கை நீட்டுவது வரை குறையவே இல்லை "திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது "என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருடர்களும்திருந்த மாட்டார்கள் சட்டத்தாலும்திருத்த முடியாது என்ற நிலையை இன்று வரை உள்ளது இந்த நிலை எப்போது மாறும்?