Advertisment

ராமதாசின் மிரட்டல் அறிக்கை: பேராயர் எஸ்ரா சற்குணத்தை மிரட்டுகிறாரா? - வன்னியரசு அறிக்கை

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பேராயர் எஸ்ரா சற்குணம்,தான் சார்ந்தசமுதாயத்தை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாசு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

Advertisment

vanniyarasu

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 24.4.2019 அன்று பொன்பரப்பி வன்முறையை கண்டித்து போராட்டம் நடைப்பெற்றது.

அப்போராட்டத்தில் பேசிய பேராயர் அய்யா எஸ்றா சற்குணம் அவர்கள் முழுக்க, ராமதாசின் வன்முறை அரசியல் குறித்து பேசினார். முழுக்க முழுக்க ராமதாசின் வன்முறை செயல்பாடுகளை விமர்சித்தே பேசினார்.குறிப்பிட்டசமூகத்தை எந்த இடத்திலும் அவமதித்து பேசவில்லை. ஆனால், இன்று வந்த ராமதாசின் அறிக்கையில், குறிப்பிட்ட சமுதாயத்தை பேராயர் அவமதித்து விட்டார் என்று திசை திருப்பி உள்ளார்.

அது மட்டுமல்ல, மிக மோசமாக தரம் தாழ்ந்து அய்யா எஸ்றா சற்குணத்தை விமர்சித்து இந்துத்துவக்கும்பலை தூண்டியும் விட்டுள்ளார்.

ராமதாசின் உள்நோக்கம், சாதி ரீதியாகவும் மதரீதியாகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதேஆகும். ஒரு பொறுப்பான தலைவரின் அறிக்கையாக இல்லை. அந்த அறிக்கையே மிரட்டும் தொனியிலே உள்ளது.ராமதாசின் வன்முறை அரசியலை விமர்சித்தால்,குறிப்பிட்ட சமுதாயத்தையே விமர்சித்ததாக மடை மாற்றும் போக்கு ஆபத்தானதாகும்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பேராயர் எஸ்றா சற்குணத்தை ராமதாசு மிரட்டுவதால் அவர் சார்ந்த சமுதாயத்தையே அச்சுறுத்துகிறார் என்று யாராவது மடை மாற்றினால் என்னவாகும்?இரு சமுதாயத்தாருக்கும்ராமதாஸ் மோதலை உருவாக்க திட்டமிட்டுள்ளாரா? மதமாற்றம் குறித்து அவதூறு பரப்புவதன் மூலம் பேராயரை இந்துத்துவக்கும்பலிடம் ராமதாசு காட்டிக்கொடுக்க திட்டமிடுகிறாரோ? ராமதாசின் அறிக்கையின் உள்நோக்கம் என்ன?அனைத்து சமுதாய மக்களும் ராமதாசிடம் எச்சரிக்கையாக இருப்போம்.

Ramadoss vanniarasu vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe