Vanniyar Sangam flag on the national flag pole in Kaattumannarkovil government school

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள கஞ்சங்கொல்லை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 379 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளியின் வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் வன்னியர் சங்க கொடியை சிலர் ஏற்றியுள்ளனர். இதனைப் பள்ளி திறந்தும் சிலர் கவனிக்கவில்லை. பின்னர் 10 மணிக்கு மேல் அதனை சில மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் பள்ளியில் ஒரே பரபரப்பாக இருந்தது.

Advertisment

இதுகுறித்து, காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வன்னியர் சங்கக் கொடியை அகற்றி சில மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியின் தேசியக்கொடி மரத்தில் வன்னியர் சங்கக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.