Advertisment

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் - நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

பரகத

Advertisment

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த அவசர மனு நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற எடப்பாடி தலைமையிலான அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சிலர் அப்போதே கடும் விமர்சனத்தை அதிமுக மீது முன்வைத்தனர். இந்நிலையில் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஒருசில மாதங்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ஒதுக்கீட்டுக்கு தடை விதித்து.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் விரைவாக இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை மறுநாள் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், நாளையே இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளது. இதனால் நாளை இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

supremecourt reservation
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe