Advertisment

40 அடி உயரத்தில் இருந்து வாகனத்தோடு கீழே விழுந்த இளைஞர் பலி!!! அடுத்த மாதம் திருமணம் வைத்திருந்த நிலையில் சோகம்...

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தை அடுத்த புதூர் மசூதி தெருவை சேர்ந்த 29 வயதான இளைஞர் இர்பான். இவர் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் அடுத்த மாதம் தனக்கு நடக்க உள்ள திருமணத்திற்காக வாணியம்பாடி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுபேசிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.

Advertisment

வாணியம்பாடி புதூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது வந்துக்கொண்டு இருந்தபோதுதடுப்பு சுவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இர்பான் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி நகர போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இர்பானுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

accident bike vaniyambadi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe