Advertisment

வனிதா விஜயகுமாரை கைது செய்ய வந்த போலீசார்... பேச்சுவார்த்தை நடத்தும் பிக்பாஸ் டீம்...

நடிகை வனிதா விஜயகுமார் மீது, அவரது இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் தெலங்கானாவில் கொடுத்த புகாரில் தன் மகளை கடத்தி சென்றதாக கூறியிருந்தார். அதன் பேரில் பிக்பாஸில் நடித்து வரும் வனிதா விஜயகுமாரை விசாரணை நடத்த தெலங்கானா மாநில போலீசாரும், உதவிக்கு தமிழக போலீசாரும், தெலங்கானா மாநில சமூக நலத்துறை பெண் அதிகாரியும் சென்னை வந்தனர். அவர்கள் வனிதாவை கைது செய்ய நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisment

vanitha vijayakumar

இதனை தடுக்க பிக்பாஸ் டீமும், வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதரும் தெலங்கானா போலீசாரிடமும், தெலங்கான சமூக நலத்துறை அதிகாரியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisment

இதனால் பிக்பாஸ் செட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் சிலர் சமூக வலைதளங்களில் பிக்பாஸ் டி.ஆர்.பி. ரேட்டை ஏற்றுவதற்காக இவர்கள் போடும் நாடகம் என்றும், இதேபோல மும்பையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதே யுக்தியை இங்கேயும் பயன்படுத்துகிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

police Biggboss vanitha vijayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe