நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் மாணி்க்கம் படத்தில் ராஜ்கிரண் ஜோடியாகவும், சந்திரலேகா படத்தில் விஜய் ஜோடியாகவும் நடித்தார். கடந்த 2000ம் ஆண்டில் ஆகாஷ் என்ற டிவி நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீகரி என்ற மகன் மற்றும் ஜோவிகா என்ற மகள் உள்ளார். இதன் பின்னர் வனிதாவுக்கும் ஆகாஷுக்கும் விவாகரத்து ஆனது. 2007ம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. இவர்களுக்கு ஜெயந்திகா என்ற மகள் பிறந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vanithaa.jpg)
2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்த வனிதா, நடன இயக்குநரை காதலித்து வருவதாக தகவல்.
தற்போது அவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த 9 நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் முதல் நாள் அறிமுக நிகழ்ச்சி்யில் வனிதாவுடன் இரு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர்.
தந்தை ஆனந்தராஜுடன் ஜெயந்திகா தெலுங்கானாவில் வசித்து வந்தார். மகள் ஜெயந்திகாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வனிதா சென்றுவிட்டதால் தாயும் இல்லாமல் மகள் கஷ்டப்படுவார் என்று ஆனந்தராஜ் போலீசாரிடம் அழுத்தம் கொடுத்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாட்டு போலீசை உதவியை நாடியது தெலுங்கானா போலீஸ். பிக் பாஸ் வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நசரத் பேட்டை போலீசாரிடன் சென்றனர் தெலுங்கானா போலீசார்.
வனிதாவை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர் நசரத்பேட்டை போலீசார். பிக்பாஸ் சட்ட விதிமுறைகளின்படி தற்போது வனிதா வெளியே வரமுடியாது என்பதை அறிந்து கொண்ட போலீசார் தெலுங்கானா போலீசாருடன் அது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)