Advertisment

காவல்துறை மரியாதையுடன் விடை பெறுகிறார் வாணி ஜெயராம்

Advertisment

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானது திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்பட்டது.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேதப் பரிசோதனையானது முடிந்த உடன் உடலானது நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , பின்னணி பாடகி சித்ரா, டிரம்ஸ் மணி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் வந்துஅஞ்சலி செலுத்தினார். மேலும் வாணி ஜெயராம் உடலை தமிழ்நாடு காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார். தற்போது காவல்துறை மரியாதையினைத்தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது.

vaani jeyaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe