Vandita Pandey S.P. who published the WhatsApp number to complain!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றிய நிஷா பார்த்திபன் எஸ்.பி பணிமாறுதலில் மத்தியஅரசுபணிக்குசென்ற நிலையில்,வந்திதாபாண்டேபுதுக்கோட்டை மாவட்டத்தின் 50வதுஎஸ்.பியாகநேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

Advertisment

புதியஎஸ்.பியாகவந்திதாபாண்டேவருகிறார்அன்றஅறிவிப்பு வெளியான நிலையில், அவரைப் பற்றிய தகவல்களும் சமூகவலைதளங்களில்வேகமாகபரவி மக்களிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஏ.எஸ்.பியாகஇருந்த போது, ஒரு சிறுமி பாலியல் வழக்கில் காவல்துறையைச்சேர்ந்தவர்களைகைது செய்து சிறையில் அடைத்தவர்.

Advertisment

கரூரில்எஸ்பியாகஇருந்த போது தேர்தல் நேரத்தில் ஒரே இடத்திலிருந்து கத்தைகத்தையாகபணத்தை அள்ளிவழக்குபோட்டவர். அரசியல் மிரட்டல்கள்,மேல் அதிகாரிகளின்மிரட்டல்கள் என எதையும்கண்டுகொள்ளாமல்மனசாட்சியோடுபணி செய்வார் என்பது மக்களிடம் பதிந்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தவந்திதாபாண்டே, “94899-46674 என்ற எண்ணில் பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு பேசலாம். படங்களாக, குரல் பதிவாக, குறுஞ்செய்தியாக ஆங்காங்கே நடக்கும் குற்றங்கள் பற்றி என்கவனத்திற்குகொண்டு வரலாம். பெண்கள் குழந்தைகளுக்கான குற்றங்கள், சட்டம் ஒழுங்குபிரச்சனைகளைசட்டத்திற்குஉட்பட்டுதீர்வு காணப்படும். கஞ்சாபோன்றவைகள்இருப்பது பற்றி வரும்தகவல்களைபெற்றுபோலீசாருடன்கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நான்ஹானஸ்டாகவேலை செய்ய வந்திருக்கிறேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.