Skip to main content

மீண்டும் திறக்கப்படும் வண்டலூர் பூங்கா!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

 Vandalur Park to reopen!

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 14,013 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 16,096 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி ஒன்று கரோனா பாதிப்பு 1,489 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,31,258  மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

 

சென்னையில் மட்டும் இன்று  2,054 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 2,348 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,636 ஆக அதிகரித்துள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது. தற்பொழுது தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் பூங்கா திறக்கப்படும் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குப்பைகள் போல மிதக்கும் கார்கள்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Cars floating like garbage

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு - வண்டலூர் வெளிவட்ட சாலை பகுதியில் கார்கள் குப்பை போல மிதக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீரில் அடித்து செல்லப்பட்ட கார்கள், தாம்பரத்தை அடுத்த கிஷ்கிந்தா சாலையின் ஓரத்தில் குப்பை போல மிதக்கின்றது. வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் வெளிவட்ட சாலையின் ஓரத்தில் தேங்கிய மழை நீரில் கார்கள் மிதக்கும் காட்சிகள் வெளியான நிலையில், பலரும் அங்கு வந்து மிதக்கும் கார்களை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

 

 

 

Next Story

வண்டலூர் பயணிக்கும் கோவை வ.உ.சி பூங்கா உயிரினங்கள்

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Vandalur Traveling Coimbatore VUC Park animals

 

கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த  நிலையில், அங்கிருக்கும் பறவைகள், விலங்குகள் என அனைத்தும் சென்னை வண்டலூர் பூங்காவிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

1965 ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா தொடர்ந்து செயல்பட்டு வந்தது. பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் என சுமார் 530 க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு அங்கு வந்தது. இந்நிலையில்  வ.உ.சி உயிரியல் பூங்காவில் சரியான கட்டமைப்பு வசதி இல்லை எனவும், இயற்கைச் சூழல் இல்லை எனவும் கூறி மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது.

 

மாநகராட்சி சார்பில் அங்கீகாரத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்ட நிலையிலும், அங்கீகாரத்தை தர மத்திய ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில், பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறை மேற்கொள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்நிலையில், கோவையில் உயிரியல் பூங்காவில் இருக்கும் பறவைகள், விலங்குகள் ஆகியவை சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதலைகள், கிளிகள், மான்கள், பாம்புகள் என பல்வேறு உயிரினங்கள் பாதுகாப்பாக கூண்டில் அடைக்கப்பட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது.