பர

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக, தமிழகத்தில் 20 இடங்களில் போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் அக்கட்சியைச் சேர்ந்த வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட அவர், குறிப்பிட தகுந்த வாக்குகளைப் பெற்றிருந்தார்.

Advertisment

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் அவரிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் ட்வீட் செய்துள்ளார்கள். இதைப் பார்த்த அவர், "நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக ‘வலிமை’ பட அப்டேட் கிடைக்கும் தம்பி" என்று தெரிவித்துள்ளார். இதே தொகுதியில் நடிகர் கமலும் போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.