Advertisment

தாறுமாறாக ஓடிய வேன்; தலைமை ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு

The van ran erratically; The headmistress tragically lost her life

Advertisment

சாலையில் தாறுமாறாக ஓடிய வேன் மோதி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது வஞ்சி மாநகர். இந்த பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி சத்தியவேணி. இவர்பெட்டதாபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிக்கு வேலை காரணமாக சென்ற தலைமை ஆசிரியை சத்தியவேணி சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பொழுது தெற்குபாளையம் பிரிவு அருகே தாறுமாறாக வந்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சத்தியவேணி பயணித்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சத்தியவேணி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் வேன் தாறுமாறாக ஓடியது தொடர்பான காட்சிகளும், விபத்து காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe