Advertisment

கொடூர விபத்து; சிறுவன் பலி, 20 பேர் படுகாயம்!

van overturned on road, 20 people were injured and one was passed away

ராணிப்பேட்டை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையிசெய்யாறு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோதி இடது புறமாகக் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

Advertisment

இந்த விபத்தில் வேனியில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் ஆகாஷ் என்ற 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் .

Advertisment

van overturned on road, 20 people were injured and one was passed away

தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் விபத்துக்கான காரணத்தைக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், செய்யாறு பகுதியில் இருந்து ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு பகுதியைச் சேர்ந்த உறவினர் குழந்தையின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மீண்டும் செய்யாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

accident ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe