Advertisment

வேன் கவிழ்ந்து விபத்து; 40 பேர் படுகாயம்

Van overturned accident; 40 people were injured

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓசூரில் இருந்து உறவினர்களுடன் வேனில் திருத்தணி சென்றவர்கள் திருமண நிகழ்வை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இரு சக்கர வாகனம் ஒன்று சாலையைக் கடந்தது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திருப்பி போது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்திலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 40 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai accident ambur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe