/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2246.jpg)
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கிராமத்தில் வேன் மற்றும் அரசுப் பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வாத்தலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் சேலம் மாவட்டத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்தும், அதேபோல் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து சேலம் நோக்கி சென்ற காரும் மோதிக் கொண்டது தெரியவந்தது. இந்த விபத்தில் சேலம் மாவட்டம், சக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்(38), இவரது மனைவி கிருத்திகா(34), இவர்களது மகன் ரித்விக்(7), பொன்னுசாமி(66), உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயம் அடைந்த 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து வாத்தலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)