கடலூர் சிப்காட் அருகே லாரி மீது வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்பகோணத்தில்இருந்துகாஞ்சிபுரத்தில் நிகழ்ந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட20 க்கும்மேற்பட்டோர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கும்பகோணம் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கடலூர் சிப்காட் அருகே சாலை நடுவில் இருக்கும் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.