ADVERTISEMENT

தக்காளி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து - தமிழக எல்லையில் போக்குவரத்து பாதிப்பு

07:46 PM Sep 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மிகவும் ஆபத்தான மலைப்பகுதி ஆகும். தமிழகம், கர்நாடகா இடையே முக்கிய போக்குவரத்து பகுதியாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.

இதில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிக கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் திம்பம் மலைப் பகுதியில் 16 டன் அளவு கொண்ட வாகனம் மட்டுமே அனுமதித்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 8வது கொண்டை ஊசி வளைவில் தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் தன்வாய்ப்பாக ஓட்டுநர் தன்ராஜ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். வாகனம் கொண்டை ஊசி வளைவிலேயே கவிழ்ந்து விழுந்ததால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தமிழகம் - கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அடர்ந்த வனப் பகுதியில் இரவு 9 மணியிலிருந்து நள்ளிரவு 2 மணி வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு பண்ணாரி சோதனைச் சாவடிக்கு தகவல் தெரிவித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் தக்காளி பாரத்தை வேறு வண்டிக்கு மாற்றம் செய்து கவிழ்ந்து கிடந்த வேனை ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் 6 மணி நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது. சரக்கு வேனில் நான்கு டன் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததால் கொண்டை ஊசி வளைவில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்தது தெரிய வந்தது. எனவே சிறிய ரக வாகனங்களுக்கும் பாரம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT