வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இன்று ஜீன் 12 ந்தேதி காலை தனியார் நிறுவன ஊழியர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர், கம்பெனி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே சென்ற நபர் வாகனத்தை வளைத்த நிலையில், அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

Advertisment

van accident at vellore

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உஷா, சிவாகாமி ஆகிய இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

காயம்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டனர். காயமடைந்தவர்களை மீட்டு வேறு ஒரு வேனில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவர்களுக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.