Advertisment

ஆலைக்கு தொழிலாளர்களை அழைத்து சென்ற வேன் விபத்து!

Van accident that took workers to the factory!

Advertisment

திருப்பத்தூர் மாவட்டத்தில், ஆம்பூருக்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலைத் தடுப்பில் மோதி எதிர்த்திசையில் சென்ற லாரி மீது மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆம்பூரை அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் வாணியம்பாடி நெக்குந்தி பகுதியில் இருந்து 20- க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். வேன் அவர்களை வழக்கம் போல், ஏற்றிக்கொண்டு தொழிற்சாலையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

சோலூர் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புகளைத் தாண்டி வந்த வாகனம், எதிர்திசையில் வந்துக் கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில், வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. விபத்தில் வேன் ஓட்டுநர், பெண் தொழிலாளர்கள் இருவர், அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 23 பேரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisment

இந்த விபத்து காரணமாக, சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ambur incident police
இதையும் படியுங்கள்
Subscribe