/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amuln.jpg)
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி (60) இன்று (21-06-25) உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமுல் கந்தசாமி. இந்த நிலையில், கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகளால் இவர், 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவமனையில் தொடர்ச்சியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரு தினங்களாக அவரது உடல்நிலை பின்னடவை சந்தித்திருந்தது. இதன் காரணமாக வெண்டிலேட்டர் மூலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பால் வால்பாறை தொகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)