/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murder2_9.jpg)
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி அக்ராகரத்தான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் 20 வயதான சந்தியா. இவரது கணவர் சரவணன். இருவருக்கும் தொட்டிகிணறு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 4 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதான விரோஷன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கணவன் - மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவனை பிரிந்த சந்தியா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
சந்தியா திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். பணியாற்ற செல்லும்போது சந்தியாவுக்கு வேறொரு நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலன் தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிள்ளையை விட்டு வா என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இன்று ஜனவரி 31 ந்தேதி மதியம் பெற்ற குழந்தைக்கே ஊசி போட்டு கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murder1_13.jpg)
குழந்தை இறந்த தகவலை அறிந்த கிராம மக்கள் நன்றாக இருந்த குழந்தை இறந்ததில் ஏதோ மர்மம் உள்ளது என போலிஸாருக்கு தகவல் கூறினர். தகவலின் பேரில் திம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு விஷ ஊசிப்போட்டு கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர் மருத்துவர்கள். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)