Advertisment

திண்டுக்கல்லில் காதலர் சங்கமம்; காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிப்பு!

Valentine's Confluence in Dindigul; Love married people honor!

Advertisment

திண்டுக்கல்லில் காதலர் சங்கமத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் வனஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பாராட்டி கௌரவித்து சிறப்புரையாற்றினர்.

Advertisment

சிபிஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துச்சாமிஆகியோர் காதலர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து காதலர்களை வாழ்த்தி பேசினர். மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாப்பாத்தி, பாண்டியம்மாள், சுமதி, தங்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காதல் தம்பதிகள் பாரதி பாலாஜி, பொன்மதி கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி ராஜாமணி, பாண்டிச்செல்வி பிரேம்குமார், கீர்த்தனா விஷ்ணு,மோகனா அழகுராஜா, ஜெயந்தி பாலமுருகன்,தரணி சபரீஸ்வரன், வீரச்சின்னு தேவா, நித்யா வினோத், ராஜேஷ்வரி, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு காதலரும் தாங்கள் காதலித்த நாட்களில் கிடைத்த இனிமையான தருணங்களை மலரும் நினைவுகளாக உருக்கமுடன் பேசிக் கொண்டனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe