Advertisment

மணக்கோலத்தில் போலீசிடம் பாதுகாப்புக் கேட்டு தஞ்சம்!

Young wedding couple

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயது சீனிவாசன். இவர் தனியார் கம்பெனியில் ஊழியராகப் பணி செய்து வருகிறார். இவரும், கம்பன் நகரைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் பேகம் (வயது 26) என்பவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் ஜாஸ்மின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் நேற்று காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி மைலம் மலையில் உள்ள முருகன் கோயில் முன்பு தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஜாஸ்மின் வீட்டின் தரப்பினரால் உயிருக்கு ஆபத்து உள்ளது என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கேட்டு தஞ்சமடைந்தனர்.

Advertisment

பின்னர் மணமகள் ஜாஸ்மின் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாரிடம் கொடுத்த புகாரில், எங்கள் குடும்பத்தினரால் எங்கள் இருவருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே எங்களுக்குப்போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. போலீசார் அவர்களுக்கு உரிய பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

police station couple villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe