style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் குடும்ப சூழலால் வளைகாப்பு செய்ய முடியாமல் இருந்த பெண் காவலருக்கு, காவல்நிலையத்தில் பணியாற்றும் சக போலீஸ்காரர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் இலக்கியா என்பவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ராசு தனியார் அரசி ஆலையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முட்டியாம்பூண்டி கிராமத்தை இலக்கியா, அதே பகுதியைச் சேர்ந்த ராசுவை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.
இலக்கியா ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை இருந்தது. இதனை சக காவலர்கள் மூலமாக அறிந்த காவல் ஆய்வாளர் இளங்கோவன், மற்ற காவலர்களுடன் ஆலோசனை செய்து இலக்கியாவுக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து ஆளுக்கொரு செலவை ஏற்றுக்கொண்டு தங்களது சொந்த சகோதரிக்கு செய்தது போல வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இலக்கியா - ராசு திருமணம் இருவீட்டாருக்கும் பிடிக்கவில்லை என்பதால் கடந்த ஒரு வருடமாக இருவீட்டாரும் இவர்களிடம் பேசவில்லை. நிறைமாத கர்ப்பிணியான இலக்கியா தனது நிலை குறித்து சக பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்த போலீசார் மற்றும் காவலர்கள் 30க்கும் மேற்பட்டோர் தங்களால் இயன்ற சிறு தொகையை போட்டு இலக்கியாவுக்கு பட்டுப்புடவை எடுத்த 9 வகையான சாப்பாடு போட்டு ஆரத்தி எடுத்து வளைகாப்பு நடத்தியதாக சொல்கின்றனர் காவல்நிலைய காவலர்கள்.
சக காவலர்கள் எடுத்த இந்த வளைகாப்பு விழா இலக்கியாவை மட்டுமன்றி அந்தப் பகுதி பொதுமக்களையும் நெகிழ வைத்தது.