Advertisment

வக்பு வாரிய தேர்தலை நடத்த வேண்டும்! ம.ஜ.க. வேண்டுகோள்!

வக்பு வாரிய தேர்தலை நடத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் பதவிக்கு இன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை அதனை ரத்து செய்வதற்தாக அறிவிப்பு செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

இந்தியாவில் இரயில்வே, ராணுவம் ஆகியவற்றுக்கு அடுத்த படியாக சொத்துக்களை கொண்ட மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக வக்பு வாரியம் நிகழ்கிறது. தமிழ்நாட்டில் அரசர்களும், பொதுமக்களும், செல்வந்தர்களும், பொதுநல காரியங்களுக்காகவும், இஸ்லாமிய ஆன்மிக பணிகளுக்காகவும் தானம் செய்யப்பட்ட சொத்துக்களை தமிழ்நாடு வக்பு வாரியம் பராமரித்து விடுகிறது.

இதற்கு நீண்ட காலமாக தலைவர் இல்லாமல் இப்பதால், பல பள்ளிவாசல்கள் மற்றும் தர்ஹாக்களின் நிர்வாக செயல்பாடுகள் முடங்கி கிடக்கின்றன,எனவே இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் கவனம் எடுக்க வேண்டும் என ஜமாத்தினர் எதிர்பார்க்கிறார்கள்.உடனடியாக தமிழக அரசு மறு தேதியை அறிவித்து இத்தேர்தலை நடத்த வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

taminmum ansari mla
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe