Skip to main content

தமாகாவில் இருந்து வந்தவருக்கு இரண்டுபதவியா? -அதிருப்தியில் ர.ரக்கள்

Published on 28/06/2019 | Edited on 28/06/2019

 

தமாகாவில் இருந்து வந்தவருக்கு இரண்டு பதவிகளை வழங்குவது என்ன நியாயம் என முன்னாள் அமைச்சரும் எம்,பியுமான வைத்தியலிங்கத்தையும், சிட்டிங் அமைச்சர் துறைக்கண்ணுவையும் கண்டித்து 30 க்கும் மேற்பட்டோர் அதிமுகவினர்  அக்கட்சியில் இருந்து விலகியிருப்பது கும்பகோணம் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

 

mp

 

தஞ்சை மாவட்டம் பாபநாசம், சுவாமிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முன்னாள் தமாக எம்,எல்,ஏ ராம்குமார், அவரது ஆதரவாளரான சுவாமிமலை சங்கர் உள்ளிட்ட சிலர் தமாகாவில் இருந்து விலகி அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் முன்னிலையில் ஐக்கியமானார். அவர்கள் சேர்ந்து ஓராண்டுக்குள்,  கூட்டுறவு உள்ளிட்ட பதவிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.  நீண்ட காலமாக கட்சியில் இருக்கும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் துறைக்கண்ணுவிடம் பலமுறை கூறியும் எந்தபதிலும் இல்லை என்பதால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.

 

இதுகுறித்து சுவாமிமலை திருமஞ்சன வீதியை சேர்ந்த அதிமுக அம்மா பேரவை நகர செயலாளர் ரவிச்சந்திரன், சுவாமிமலை அதிமுக பேரூர் செயலாளர் ரங்கராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, " தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து மத்திய கூட்டுறவு சங்க இயக்குனர் பதவி, சந்திரசேகரபுரம் கூட்டுறவு பண்டகசாலையில் இயக்குனர் பதவி என இரண்டு பதவிகள் வழங்கப்பட்டது.

 

இதற்கு சுவாமிமலை பகுதி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியில் புதிதாக சேர்ந்தவருக்கு ஒரு ஆண்டில் ஒருவருக்கு இரண்டு பதவி வழங்கப்பட்டிருக்கு. ஆனால் காலம் காலமாக கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒரு பதவி கூட வழங்கவில்லை. அதோடு பரஸ்பர சகாய நிதியிலும் இரண்டு கிளர்க் போஸ்டிங்கும் அவரது உறவினருக்கு கொடுத்துள்ளனர். இது எங்களை ஏமாற்றுவதாகவே இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் துறைக்கண்ணுவிடமும்,  மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கத்திடமும்  பலமுறை கூறியும் எந்த  பதிலும் இல்லை.  கட்சியில் உள்ள தொண்டனுக்கு எந்த பதவியும் வழங்கவில்லை. ஆகவே அதிமுகவில் இருந்து விலகுகிறோம். என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

 

சுவாமி மலைப்பகுதியில் அதிமுகவில் இருந்து 30 பேர் விலகியதற்கு பின்னணியில் அமைச்சர் துறைக்கண்ணுவின் கைவரிசை இருப்பதாக அதிமுகவினர் கிசுகிசுக்கின்றனர். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது," முன்னாள் எம்எல்ஏ ராம்குமார் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளராக இருக்கிறார். அதுபோல ராம்குமாரின் ஆதரவாளரான சங்கரும் வைத்தி ஆதரவாக இருக்கிறார். அதனால் தனக்கு எதிராக ஒரு அரசியல் லாபியை இவர்கள் நடத்தி வருகிறார்கள் என துரைக்கண்ணு பலமுறை தனது ஆதரவாளர்கள் சிலரிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார்.

 

 இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் சிபாரிசின்படி கும்பகோணம் நகர செயலாளர் ராமநாதன் இந்தப் பொறுப்புகளை வழங்கியிருக்கிறார். இது அமைச்சர் துறைக்கண்ணுக்குத் தெரிந்து கடும் கோபத்துக்கு உள்ளாகி அவரது ஆதரவாளர்களான சிலரை கிளப்பிவிட்டு கட்சியிலிருந்து நீங்குவதாக புகார் அனுப்ப சொல்லியிருப்பதாக கூறுகிறார்கள். அதன்படியே 30 பேர் நீங்குவதாக அறிவித்துள்ளனர்." என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

“கத்தரிக்கோல் சின்னம்; அதிமுகவில் இருந்து விலகத் தயார்” - வைத்திலிங்கம்

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

Vaithilingam speech at Oratha Nadu AMMK General Meeting

 

திமுக அரசைக் கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஒரத்தநாட்டில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.

 

அப்போது பேசிய அவர், “சுயநலக்காரராக உள்ள எடப்பாடி பழனிசாமியால் தான் 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் இன்று அதிமுக தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 524 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய் என்றார்கள். கரும்புக்கு டன்னுக்கு 4000 ரூபாய் என்றார்கள். சிலிண்டர் கேஸ்க்கு ரூ. 100 மானியம் என்றார்கள். மின்வெட்டு, கள்ளச்சாராயம் என திமுக ஆட்சியில் நாடு சீரழிந்துகொண்டுள்ளது. 

 

எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். துரோகிகள் அதிமுக ஆளுங்கட்சியாக வருவதைத் தடுத்துவிட்டார்கள். அதை நிறைவேற்றத்தான் அதிமுகவும் அமமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயல்பட இருக்கிறது. இங்கு ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் சத்தம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர ஓபிஎஸ் - டிடிவி அடித்தளமிட்டுள்ளார்கள். 

 

எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை இல்லை என்றால் ஒரு தொகுதியில் கூட எடப்பாடி பழனிசாமி 1000 வாக்குகளைக் கூட வாங்க முடியாது. ஒருவர் பேசினாராம், அவர்கள் என்ன கத்தரிக்கோல் சின்னத்திலா நிற்கப்போகிறார்கள் என்று. நாங்கள் கத்தரிக்கோல் சின்னத்தில் நிற்கத் தயார். நீங்கள் பிளேடு சின்னத்தில் நிற்கத் தயாரா. எங்களை விட நீங்கள் ஒரு வாக்கு அதிகம் வாங்கிவிட்டால் நாங்கள் அதிமுகவில் இருந்தே விலகிவிடுகிறோம்” என்றார்.

 

 

 

Next Story

"ஓபிஎஸ்ஸின் நிலை பரிதாபத்துக்குரியது" - முன்னாள் அமைச்சர் காமராஜ் பதிலடி

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

former minister kamaraj talks about ops and vaithilingam
கோப்பு படம்

 

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஓபிஎஸ் அணியினர் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது டிடிவி தினகரன் வீட்டில் காமராஜ் வேலை செய்தவர். எங்களை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என பேசி இருந்தார். 

 

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேற்று மன்னார்குடியில் வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "வைத்திலிங்கத்துடன் இருந்தவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து விட்டனர். கடந்த சில தினங்களாக வைத்திலிங்கம் அருவருக்கத்தக்க வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்தி வருகிறார். அவர் தன்னிலை மறந்து பேசக்கூடாது. நான் எந்த தொகுதியிலும் நின்று ஜெயிக்கக் கூடிய தெம்பு உள்ளவன். வைத்திலிங்கம் வரும் தேர்தலில் எந்த தொகுதியில் எந்த சின்னத்தில் நிற்பார். அரசியலில் அனாதையாகிவிட்ட வைத்தியலிங்கம் என்ற கல்லை கழுத்தில் கட்டிக்கொண்டு கடலில் இறங்கிய ஓபிஎஸ்சின் நிலை பரிதாபத்துக்குரியது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வைத்தியலிங்கம் தோல்வியடைந்த பின்னர், சசிகலா குடும்பம் தான் தன்னை தோற்கடித்ததாக ஜெயலலிதாவிடம் கூறி ராஜ்யசபா உறுப்பினரானவர் தான் வைத்திலிங்கம். வேலைக்காரி எப்படி மகாராணி ஆக முடியும் என கேட்ட வைத்தியலிங்கம் தான் தற்போது சசிகலா, டிடிவி  தினகரனுடன் ஒன்றிணைந்து விட்டோம் என கூறுவது பச்சை பச்சோந்தி தன அரசியலாகும்" என பதிலடி கொடுத்துள்ளார்.