
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு வைத்தியநாதசுவாமி, தையல் நாயகி இருவரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (28/04/2021) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி பக்தர்கள் பங்கேற்பின்றி, அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இன்று (28/04/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நான்கு ரத வீதிகளில் பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க, வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஐந்து பேருக்கு மேல் கூட்டமாகக் கூடுவதற்கு தடை, மருந்துக்கடைகள், பால் விற்பனை நிலையங்களைத் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்படுகிறது. நாளை (29/04/2021) அதிகாலை 04.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.