Advertisment

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? -வைரமுத்து ட்வீட்  

சென்னையிலுள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்புசிறப்பு பட்டமளிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரபல கவிஞர் வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

vairamuthu twit

ஆண்டாள் தொடர்பான பிரச்சனையை மனதில் வைத்துக்கொண்டு காழ்புணர்ச்சியின் காரணமாகஇந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர் எனதமிழக அரசியல் தலைவர்கள் பலர் கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவர்க்கும் நன்றி.

இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? எனக் கூறியுள்ளார்.

dmk stalin seeman vaiko Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe