The governor knows the ban on the release of seven - poet Vairamuthu tweeted

Advertisment

டெல்லிக்கு 3 நாள் பயணமாகச்சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரதுஇல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், கரோனாசூழல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதிமன்றம் இதற்குக் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. இதனால், இன்றுதமிழக ஆளுநர், உள்துறை அமைச்சரையும், குடியரசுத் தலைவரையும் சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து கவிஞர் வைரமுத்துட்வீட்ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில்,

எழுவர் விடுதலைக்கு ஆதரவாக

உச்ச நீதிமன்றம் கருணை காட்டுகிறது;

தமிழக அமைச்சரவை முன்பே

தீர்மானம் நிறைவேற்றிவிட்டது;

எங்களுக்கு மறுப்பில்லை என்று

காங்கிரஸ் கட்சியும்

பெருந்தன்மை காட்டுகிறது.

இதன்பிறகும் விடுதலைக்கு

யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்.

எனத் தெரிவித்துள்ளார்.