உலகத்தின் ஒப்பற்ற நூலனா திருக்குறளை உருவாக்கிய திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2ம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் திருவள்ளுவர் சிலைகக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Vairamuthu-Thiruvalluvar

Advertisment

இந்நிலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவரின் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மது உடலுக்கு மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் கேடு விளைவிக்கிறது.மது விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது. இதுதான் தமிழகத்திற்கு விஷம்" என தெரிவித்தார்.