Advertisment

பாலிவுட்டுக்கு தமிழகத்து பெண் மான்களை பிடிக்குமளவுக்கு ஆண் மான்களை பிடிப்பதில்லை - வைரமுத்து ட்விட்!

பாலிவுட் திரையுலகில் சிலர் தனக்கு எதிராக வதந்தி பரப்புகிறார்கள் என்று கூறிய ஏ.ஆர் ரஹ்மானுக்கு கவிப்பேரரசு வைரமுத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisment

Advertisment

தோனி புகழ் மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் தில் பெசாரா. இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரின் இசையில் பாலிவுட் திரைப்படம் ஒன்று வெளியானதில் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஹ்மான், பாலிவுட்டில் தான் வேலை செய்ய கூடாது என்று சிலர் நினைப்பதாகவும், எனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்றும்,இந்த படத்தின் இயக்குநரிடம் கூட ரஹ்மானிடம் சென்றால் பாடல் இசையமைத்து தர நீண்ட நாட்கள் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இறைவன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு கவிப்பேரரசு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட் ஒன்றையும் போட்டுள்ளார். அதில், அன்பு ரகுமான்! அஞ்சற்க. வட இந்தியக் கலையுலகம் தமிழ்நாட்டுப் பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை. இரண்டுக்கும் உயிர்வாழும் எடுத்துக்காட்டுகள் உண்டு. ரகுமான்! நீங்கள் ஆண்மான்; அரிய வகை மான். உங்கள் எல்லை என்று கூறியுள்ளார்.

Vairamuthu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe