தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி கிராமத்தில் கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக விழா நடந்தது. இதில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசினார்.

Advertisment

vairamuthu

அப்போது அவர், ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைகளிடம் அன்பு செலுத்துகிறீர்கள். எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் சொல்ல வேண்டியது ஒன்று இருக்கிறது.

Advertisment

உன்னை டாக்டராக்குவேன், உன்னை இன்ஜீனியர் ஆக்குவேன், உன்னை வழக்கறிஞராக ஆக்குவேன் என்று நீங்கள் பிள்ளைகளுக்கு வாக்கு கொடுப்பதைவிட, ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மிகப்பெரிய வாக்குறுதி, மகனே, மகளே இனிமேல் என் வாழ்நாளில் நான் மதுவை தொடமாட்டேன் என்ற உத்தரவாதம் கொடுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். இவ்வாறு பேசினார்.