
நகைச்சுவை நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரின் மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவரது இரங்கல் செய்தியில், ''விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு; அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார், அதில்.
''அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!
திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!
மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.
கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க் கதாநாயகன்''
எனக் கூறியுள்ளார்.
Follow Us