ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

vairamuthu condemned to tamil language removed in southern railway

இதற்கு கவிஞர் மற்றும் பாடலாசிரியரானவைரமுத்து டுவிட்டரில்கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஆடு திருடுகிறவன் முதலில் பிடிப்பது ஆட்டின் குரல்வளையைத்தான். அதேபோல் தான் கலாச்சாரத்தை களவாடப் பார்க்கிறவர்கள் மொழயின் குரல்வளையை பிடிக்கப் பார்க்கிறார்கள். வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு என கூறியுள்ளார்.