Skip to main content

தமிழாற்றுப் படை வெளியீடு! -கவிப்பேரரசுக்கு தலைவர்கள் புகழாரம்

Published on 13/07/2019 | Edited on 13/07/2019
Vairamuthu


கவிப்பேரரசு வைரமுத்துவின் ’தமிழாற்றுப்படை’ வெளியீட்டு விழா 12-ந் தேதி  மாலை சென்னை காமராசர் அரங்கில் சிறப்புற நிகழ்ந்தது. அரங்கு கொள்ளாத கூட்டம். அரங்கு முழுக்க பிரபல முகங்களே தென்பட்டன. திரைமறைவில் இருந்தபடி நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த தொகுப்பாளர்களின் கணீர்க் குரலும் உச்சரிப்பும் நிகழ்ச்சியின் கூடுதல் பலம். 

 

Vairamuthu



நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற நீதியரசர் விமலா, தமிழுக்குப் பெருமை சேர்க்கிறவர் என்று கவிப்பேரரசுக்கு புகழாரம் சூட்டினார். கம்பீரமாக உணர்ச்சிகரமாக முக்கால் மணி நேரம் உரை நிகழ்த்தினார் மறுமலர்ச்சி தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ. தமிழாற்றுபடையில் விவரிக்கப்பட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி சரஞ்சரமாக வார்த்தைகளை அடுக்கி, அவையோரை ஆர்ப்பரிக்க வைத்தார். வைரமுத்துவே, தமிழாற்றுபடையை எழுதியது நானா? இல்லை வைகோவா? என்று வியக்கும் அளவிற்கு நூலின் பகுதிகளை அப்படியே நினைவில் இருந்து சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.  

 

 

Vairamuthu



கவிஞரின் மகன் கபிலன், தமிழாற்றுப்படையை இணையத்தில் எப்படியெல்லாம் உலகத் தமிழ் மக்கள் ருசிக்கலாம் என்பது குறித்து விளக்கினார்.

 

Vairamuthu


முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம் நிதானமாக கவிஞரின் வரிகள் பலவற்றைத் தொட்டுக் காட்டியதோடு, இந்தியைத் தவிர தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் இப்போது நெருக்கடியில் இருப்பதையும், அவை அனைத்தும் இணைந்து போராட வேண்டிய அவசரத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். 
 

Vairamuthu


 
இருபது நிமிட அளவுக்குப் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கலைஞரின் தமிழுக்கும் தானே வாரிசு என்பதை அழுத்தமாக நிரூபித்தார். கலைஞரோடு கவிஞருக்கு இருந்த நெருக்கம் குறித்து உருக்கமாக விவரித்த அவர், சரியான நேரத்தில்  நமக்கான போர்க் கருவியாக தமிழாற்றுப்படையை கவிஞர் வைரமுத்து தந்திருப்பதாகப் பாராட்டினார். 


 

 

Vairamuthu


தன் ஏற்புரையில், தமிழின் பெருமிதத்தை உணர்த்தவும் மேன்மையை விளக்கவும் தமிழாற்றுப்படையைப் படைத்ததாகக் குறிப்பிட்ட  வைரமுத்து, மூவாயிரம் ஆண்டுக்குப் பின்னாலிருந்து தொடங்கி தமிழாற்றுப்படையைத் தான்  படைத்ததைப் போல்,  மூவாயிரம் ஆண்டு முன்னோக்கிச் சென்று ஒரு படைப்பை படைக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

 

Vairamuthu


 

இன்றைய அவரது செம்மாந்த உணர்ச்சிகரமான உரை, உலகத்தின் சிறந்த சொற்பொழிவுகளில்  ஒன்றாகச் சுடர்விட்டது. சென்னையை இலக்கிய பெருமழையில் ஒரேயடியாய் நனைத்தது தமிழாற்றுப்படை விழா.

 

-சூர்யா
படங்கள்: அசோக்குமார்
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.