Advertisment

"திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை; மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை" - வைரமுத்து காட்டம்

kl;

நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு இதுதொடர்பாகவிரிவான விளக்கத்தை தெரிவித்துள்ளது. ஆளுநரின் முடிவை கடுமையாக எதிர்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

Advertisment

நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள் இதுதொடர்பாக பேசி வருகிறார்கள். இன்று காலை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொடுத்த தனிநபர் மசோதாவை சபாநாயகர் நிராகரித்ததால் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

Advertisment

திருப்பி அனுப்புவது

ராஜ்பவனின் மேட்டிமை

மீண்டும் அனுப்புவது

சட்டமன்றத்தின் உரிமை

நாளை

முதலமைச்சர் கூட்டும்

அனைத்துக்கட்சிக்

கூட்டத்தின் முடிவை

ராஜ்பவனும்

ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல

இருள்கட்டிக் கிடக்கும்

ஏழைக் குடிகளின்

ஓலைக் குடிசைகளும்

கண்ணில் நீரோடு

கவனிக்கின்றன

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe